பைஸரை தொடர்ந்து மேலும் ஒரு கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

நியூயார்க் (25 டிச 2021): அமெரிக்காவில் இரண்டாவது கோவிட் மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவுக்கு பைசர் (Pfizer) நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்துள்ளது. இதற்கு அங்கிகாரம் கிடைத்த மறுநாளே இரண்டாவது மாத்திரை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய மாத்திரையை மெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் மாத்திரையை உட்கொள்ள வேண்டும். இது இறப்பு மற்றும் மருத்துவமனையில் தங்குவதை 30 சதவிகிதம் குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேவேளை…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஃபைஸர் நிறுவனம் சொல்வது என்ன?

நியூயார்க் (01 டிச 2021): தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப்…

மேலும்...

கொரோனா வந்து மீண்டவர்களுக்கு நற்செய்தி!

லண்டன் (20 ஆக 2021): கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு தடுபூசிகள் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர். மே மாதம் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேரிடம் இருந்து…

மேலும்...

சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ரியாத் (10 ஜூலை 2021): சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து ஆணையம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபைசர்-பயோன்டெக், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10, 2021 வரை சவுதியில் மொத்தம் 19,262,679 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில், சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் சராசரியாக 166,826 கொரோனா…

மேலும்...

இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல்!

புதுடெல்லி (25 மே 2021): உலகில் கொரோன தடுப்பூசிகளில் அதிக வீரியம் கொண்ட பைசர் தடுப்பு மருந்துக்கு அதிக டிமாண்ட் நிலவுவதால் இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் பைசர் மாடர்னா தடுப்பு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய முயன்ற நிலையில் பைசர் மாடர்னா, தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது. மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும்’ என, மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை!

புதுடெல்லி (06 டிச 2020): உலகளாவிய மருந்து நிறுவனமான ஃபைசர்,கோவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து மற்றும் பஹ்ரைனில் உரிமங்களைப் பெற்ற பின்னர் இந்தியாவில் பயன்படுத்த உடனடி ஒப்புதல் கோரியுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி, சோதனைகளில் 95 சதவிகித சாதகமான முடிவுகளைக் கொண்டிருப்பதாகக் கூ றியுள்ளது. பிரிட்டனும் பஹ்ரைனும் ஏற்கனவே ஃபைசருக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதனை அடுத்து மருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விநியோகிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால் இதுவரை , ஃபைசர்…

மேலும்...