கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!

Share this News:

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்தியா கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை சந்தித்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 3ல் ஒரு பங்கு எண்ணிக்கை இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் பதிவாகி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தை தாண்டியது.


Share this News: