கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை – ஸ்டாலின்!

சென்னை (30 ஜன 2022): கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள காந்தி நினைவிடங்களில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் காந்திக்கு மரியாதை செய்துள்ளார்.

சென்னை மெரினாவிலுள்ள காந்தி சிலையில், காந்தி உருவப்படம் வைத்து அதற்கு முதல்வர் ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இணைந்து மலர் தூவி மரியாதை செய்தனர் .

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவுசெய்திருக்கிறார்.

தனது அப்பதிவில் அவர் “மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply