பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் முஸ்லீம் வாலிபர் பலி!

Share this News:

மங்களுரு (22 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் பெல்லாரேயில் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள மொக்ரல் புதூரில் வசிப்பவர் முஸ்லிம் வாலிபர் மசூத். இவர் கர்நாடக மாநிலம்
சுள்ளியா, களஞ்சாவில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மசூத் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு கடைக்குச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுதிர் மற்றும் மசூத் இடையே தவறுதலாக ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர். இந்த சிறிய காரணத்திற்காக ஏற்பட்ட சண்டையில் சோடா பாட்டில் உள்ளிட்டவைகளால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த மசூத், மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மசூத் உயிரிழந்தார்.

மசூத் மீது தாக்குதல் நடத்திய சுனில், சுதிர், சிவா, சதாசிவ், ரஞ்சித், அபிலாஷ், ஜிம் ரஞ்சித் மற்றும் பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply