சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

Share this News:

போபால் (19 செப் 2022): மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 16 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்றபோது, வருங்கால கணவர் முன் சிறுமி இரண்டு மைனர்கள் உட்பட 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால், இரு குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், இரு குடும்பத்தாரும் புகார் அளிக்க விரும்பவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெண் அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்குச் சென்று ஆலோசனை நடத்திய பிறகே குடும்பம் புகார் அளித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசியின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளில் மூவரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இன்று காலை புல்டோசருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்றனர்., மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 3 பேரின் சொத்துக்களையும் கண்டுபிடிக்க நிர்வாகம் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, அவர்களின் வீடுகளும் இடிக்கப்படும் என்று . ஏஎஸ்பி அனில் சோன்கர். தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் சனிக்கிழமை இரவு ரேவாவில் இருந்து கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையில் இருந்து கைது செய்யப்பட்டதாக எஸ்பி நவ்நீத் பாசின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பையனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் 18 வயதுக்கு பின் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply