உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

Share this News:

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இறுதிச் சடங்கு முடிந்து உறவினர்கள் ஊர் திரும்பத் தொடங்கிய போது அவர் நண்பனின் தீயில்குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனந்த் (40) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது நெருங்கிய நண்பர்

உத்திர பிரதேசம் நாக்லா கங்கரை சேர்ந்த அசோக் (42). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை காலை உயிரிழந்தார். காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது ஆனந்த்தும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

இறுதிச் சடங்கு முடிந்து தகனம் செய்யும் மைதானத்தில் இருந்து மக்கள் வெளியே வரத் தொடங்கியபோது, ​​ஆனந்த் திடீரென தீயின் மீது குதித்தார். இதை பார்த்த சிலர், ஆனந்தை தீயிலிருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஆக்ரா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆக்ரா செல்லும் வழியில் ஆனந்த் இறந்துவிட்டதாக சிர்சாகஞ்ச் வட்ட அதிகாரி (CO) பிரவீன் திவாரி கூறினார்.


Share this News: