முஸ்லிம் பெயரில் போலி வலைத்தள பக்கத்தில் வகுப்புவாத கருத்துக்களை பதிவிட்டவர் கைது!

Share this News:

பெங்களூரு (25 மார்ச் 2022): கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் சமூக விரோத கருத்துகளை பதிவிட்ட சித்தரோதா ஸ்ரீகாந்த் நீராலே (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் டி.எச்.சங்கர்மூர்த்தியின் மகனான கர்நாடக பாஜக எம்எல்சி டி.எஸ்.அருணுக்கு சமூக வலைதளத்தில் முஷ்டாக் அலி என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். எம்.எல்.சி.யின் புகாரின் அடிப்படையில், ஷிவமோகாவில் உள்ள சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் வகுப்புவாத பதிவுகள் குறித்து காவல்துறையினருக்கு பல தரப்பிலும் புகார்கள் வந்தன.

இதனை அடுத்து அந்த சமூக வலைதல கணக்கு போலி என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட சித்தரோதா ஸ்ரீகாந்த் நிராலேவை காவல்துறையினர் கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply