முஸ்லிம் பெயரில் போலி வலைத்தள பக்கத்தில் வகுப்புவாத கருத்துக்களை பதிவிட்டவர் கைது!

பெங்களூரு (25 மார்ச் 2022): கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் சமூக விரோத கருத்துகளை பதிவிட்ட சித்தரோதா ஸ்ரீகாந்த் நீராலே (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் டி.எச்.சங்கர்மூர்த்தியின் மகனான கர்நாடக பாஜக எம்எல்சி டி.எஸ்.அருணுக்கு சமூக வலைதளத்தில் முஷ்டாக் அலி என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். எம்.எல்.சி.யின் புகாரின் அடிப்படையில், ஷிவமோகாவில் உள்ள சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

மேலும்...

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பேஸ்புக் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்!

புதுடெல்லி (14 ஆக 2021): கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட 300 க்கும் அதிகமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசருக்கு எதிராகவும், அவை மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று கூறி பேஸ்புக்குகளில் சிலர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஒரு குழு செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களிடையே…

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் வாட்ஸ் அப் – அதிர வைக்கும் புள்ளி விவரம்!

வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருக்கின்றன என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை…

மேலும்...

கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகள் நீக்கம் – ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

நியூயார்க் (14 ஆக 2020): கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பதிவுகளை மிகவும் கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில், போலி பதிவுகள், வெறுப்பூட்டும் பதிவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் அவை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவிட் 19 குறித்த தவறான பதிவுகள் மற்றும் போலியான மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் என 70…

மேலும்...

ஃபேஸ்புக்கில் தீ

அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள். மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை…

மேலும்...