இது டெல்லி அல்ல கொல்கத்தா – மம்தா பானர்ஜி பொளேர்!

Share this News:

கொல்கத்தா (02 மார்ச் 2020):டெல்லியில் நடைபெற்றதைப் போல் இங்கும் ‘கோலி மாரோ’ என்று கூறிவிட்டு ஊர் சுற்ற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேரணியில் கோலி மாரோ என்று கோஷமிட்ட மூவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அதையடுத்து மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “பாஜக பேரணியில் டெல்லியைப் போல் ‘கோலி மாரோ’ என்று கோஷமிட்ட 3 பேரை கொல்கத்தா போலீஸ் கைது செய்துள்ளனர். இது டெல்லி அல்ல. கொல்கத்தா! இந்த கோஷம் வன்முறையைத் தூண்டுவது; சட்ட விரோதமானது; அரக்கத்தனமானது. இப்படிப் பேசுபவர்களை சும்மா விட மாட்டோம். அவர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

டெல்லியில் மக்கள் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகின்றன. பிற்பாடு அதனை மதக்கலவரமாகக் காட்டினர். வன்முறைகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டிய பாஜக புதிய பகுதிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.


Share this News:

Leave a Reply