பாஜகவுக்கு மாணவர்களும் பெண்களும் தக்க பாடம் புகட்டியுள்ளனர் – மம்தா பானர்ஜி!

புதுடெல்லி (11 பிப் 2020): மாணவர்களும் பெண்களும் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியின் மூலம் 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். அதில்,டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை மீண்டும் ஆட்சியமைக்க உள்ள ஆம்ஆத்மி கட்சிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

வெறுப்புணர்வுப் பேச்சு, பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இதன்மூலம் அறிந்திருப்பார்கள். பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தல் சிறந்த பாடமாகும் என்று தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply