துபாயிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம்!

Share this News:

மும்பை (25 டிச 2021): ஒமிக்ரான் பரவிவரும் சூழலில் துபாயில் இருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. துபாயில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பயணிக்கும் பயணிகள் ஏழு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, தனிநபர் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவர். சோதனை முடிவு எதிர்மறையாக (நெகட்டிவ்) இருந்தாலும், இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். நேர்மறை (பாசிட்டிவ்) சோதனை முடிவு எனில், அதிகாரிகள் நோயாளியை மருத்துவமனைக்கு மாற்றுவார்கள்.

நாட்டில் ஒமிக்ரான் பரவல் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு ஹரியானா மற்றும் உத்தரபிரதேச அரசுகள் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளன. குஜராத் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் மற்றும் ஹரியானாவில், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply