கொரோனா நோயாளிக்கு எச் ஐ வி மருந்து செலுத்தி சோதனை – கேரள டாக்டர்கள் முயற்சி!

Share this News:

கொச்சி (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எச் ஐ வி மருந்தை செலுத்தி கேரள மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சீனா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் எச் ஐ வி நோயாளிகளுக்கு செலுத்தப்படும் மருந்து (Lopinavir and Ritonavir) ஆகியவற்றை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவை சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிக்கு, எச்ஐவி மருந்தை செலுத்தி முதல் முறையாக மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி முதல்வர் தாமஸ் மேத்திவ்,” தற்போது எச் ஐ வி மருந்து செலுத்தப்பட்ட கொரோனா நோயாளி சீரான நிலையில் உள்ளார்.” என்று தெரிவித்தார். அவருடன் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், ஃபதாஹுத்தீன், ஜேக்கப், கணேஷ் மோகன், கீதா நாயர் உள்ளிட்டவர்களும் இருந்தனர்.

இதே முறையில் கொரோனா நோயாளிகளுக்கு ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் எச் ஐ வி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் 22 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply