டெல்லி மாணவர்கள் மீது சுட்டவனை கோட்சே என பாராட்டிய இந்துத்வா அமைப்பு!

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவனை மற்றும் ஒரு கோட்சே என இந்து மஹா சபா பாராட்டியுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். ராம் பகத் கோபால் போலீசாராக் கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால் அவன் சிறுவன் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராம் பகத் கோபாலை அகில இந்திய இந்து மஹா சபா (Akhil Bharat Hindu Mahasabha (ABHM)) பாராட்டியுள்ளது. இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் அஷோக் பாண்டே, துப்பாக்கியால் சுட்டவன் உண்மை இந்திய தேசியவாதி என்றும், மற்றும் ஒரு நாதூராம் கோட்சே என்றும் பாராட்டியுள்ளார்.

மேலும் ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள், ஜாமியா மில்லியா மாணவர்கள், அலிகார் பல்கலை மாணவர்கள் அனைவரும் சுடப்பட வேண்டியவர்கள் என்றும் சர்ச்சையான கருத்தை அசோக் பாண்டே வைத்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply