மாணவர் கையில் கல் – பொய் சொன்ன ஊடகங்கள் – உண்மை பின்னணி வேறு!

புதுடெல்லி (19 பிப் 2020): ஜாமியா மில்லியா பல்கலைக்கழத்தில் போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியபோது, மாணவர் ஒருவர் கையில் கல் வைத்திருந்ததாக இந்தியா டுடே பொய் தகவலை வெளியிட அது என்ன என்பதை ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற ஊடகம் வெளிக் கொண்டு வந்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 15ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற போராட்டம் போலீசாரின் தாக்குதலால் வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு காவல்துறையினர் தீவைத்தனர். அதுமட்டுமின்றி…

மேலும்...

ஜாமியா வளாகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது…

மேலும்...

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (11 பிப் 2020): ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்சிஆர், சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூர தாக்குதல் நடைபெற்று உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி – இன்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக், ஜாமியா பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜாஃப்ராபாத் துணிக் கடை ஒன்றின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்து வந்த அவர்கள்,  தொடர்ந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்….

மேலும்...

BREAKING NEWS: டெல்லி ஜாமியா பல்கலை அருகே மீண்டும் துப்பாக்கிச் சூடு!

புதுடெல்லி (02 பிப் 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் அருகே மீண்டும் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஜாமியா பல்கலை அருகே மூன்றாவது முறையாக துபாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது. ஸ்கூட்டியில் வந்த பயங்கரவாதிகள் மாணவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்பு அவர்கள் தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால்…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு விவகாரம் – பிரதமர் மோடிக்கு அசாதுத்தீன் உவைசி கிடுக்கிப்பிடி கேள்வி!

புதுடெல்லி (31 ஜன 2020): “டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் உடைக்கு அடையாளம் என்ன?” என்று பிரதமர் மோடிக்கு உவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பேசியிருந்த பிரதமர் மோடி, வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் டெல்லியில் “ஜாமியா மில்லியா பல்கலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியின் உடை குறித்து அடையாளம் தர முடியுமா?” என்று…

மேலும்...

டெல்லி மாணவர்கள் மீது சுட்டவனை கோட்சே என பாராட்டிய இந்துத்வா அமைப்பு!

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவனை மற்றும் ஒரு கோட்சே என இந்து மஹா சபா பாராட்டியுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம்…

மேலும்...

டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சிறுவனாம் – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர்…

மேலும்...