ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற சுகாதாரக் குழு பரபரப்பு குற்றச்சாட்டு!

Share this News:

புதுடெல்லி (13 செப் 2022): இந்தியாவில் கோவிட் பாதிப்பால் அதிகமானோர் உயிரிழக்க ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே கரணம் என்று நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழு தனது 137வது அறிக்கையினை திங்கள்கிழமை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.

அதில் , “கோவிட்டால் உலகிலேயே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது, ​​நாட்டின் சுகாதார அமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்தன. இதனால் கோவிட் பாதிப்பு அதிகரித்து இறப்புகள் அதிகரித்தன, மருத்துவமனைகள் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் இயங்கின. கறுப்புச் சந்தை, பதுக்கல் போன்றவற்றால் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒன்றிய அரசு நிலைமையின் தீவிரத்தை முன்னறிவித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு மோசமாகியிருக்காது. அவ்வாறு செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் முதல் அலைக்கு பின்னர் முன்னெச்சரிக்கை அணுகுமுறையை தொடர்ந்திருந்தால், இரண்டாவது அலையின் தீவிரத்தை குறைத்திருக்க முடியும். சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


Share this News:

Leave a Reply