குஜராத்தில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி!

Share this News:

அஹமதாபாத் (10 டிச 2022): நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டன.

இத்தேர்தலில் 156 தொகுதிகளில் வெற்றிபெற்று குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், குஜராத்தில் வெற்றிபெற்ற 182 எம்.எல்.ஏ.க்களில் ஒரே ஒருவர் மட்டுமே இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ஜமால்பூர்-ஹெடியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய இம்ரான் ஹிடவாலா 13 ஆயிரத்து 658 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இவர் கடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டார்.

தற்போதைய தேர்தலில் இம்ரானுக்கு மீண்டும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கிய நிலையில் தன்னை எதிர்ப்பு போட்டியிட்ட பூஷன் புட்டோவை விட 13 ஆயிரத்து 658 வாக்குகள் அதிகம் பெற்று பெற்றார்.


Share this News:

Leave a Reply