அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பிய நான்கு இளைஞர்கள் கைது!

Share this News:

அகமதாபாத் (10 மே 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நான்கு இளைஞர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஷாவின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளதாக சிறப்பு போலீஸ் கமிஷனர் (குற்றம்) அஜய் தோமர் தெரிவித்தார். ஷாவின் பெயரில் ஒரு போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக ஊடக தளங்களில் வைரலாக்கியதன் பேரில் அவர்கள் கைது செய்யபட்டுள்ளதாக டோமர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அகமதாபாத்த்தில் போலீசார் விசாரணையி இருப்பதாகவும் அவர்கள் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 (சி) மற்றும் 66 (ஈ) (கணினியைப் பயன்படுத்தி மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, ஷா தனது உடல்நிலை குறித்த சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் நான் உடல்நலத்துடன் இருப்பதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: