வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

Share this News:

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன.

இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு வெளிநாட்டு அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்தபடி உள்ளன.

இதனை அடுத்து அவர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் இந்தியாவில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: