ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

Share this News:

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை பாஜக பயன்படுத்துகிறது என்றும், என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல, இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் என யாராக இருந்தாலும், அவரை நம்பும் அனைவரின் கடவுள் ராமர் என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அறிவிக்கப்படும்போது சாமானியர்களின் கவனத்தை திசை திருப்ப ராமர் பெயரை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை உள்ளது என்று கூறிய பரூக் அப்துல்லா, எங்கள் ஒற்றுமைக்கு எந்த தடையும் இல்லை, அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, நாம் மக்களுக்காக போராடி சாக வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்” என்றார்.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய அவர், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். .

மேலும் தேர்தலின் போது ‘இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்’ என்று பாஜகவினர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் பேச்சில் விழுந்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்… என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.


Share this News:

Leave a Reply