கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த குடும்பங்கள் வசிக்கும் கட்டிடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply