விவசாயிகள் போராட்டத்தைத் தொடர கூட்டு கிசான் மோர்ச்சா முடிவு!

Share this News:

புதுடெல்லி (04 டிச 2021): மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் வாபஸ் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

இந்நிலையில் முக்கிய கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், டெல்லி எல்லையில் முற்றுகையைத் தொடர்வதில் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தொடர்வது என்றும் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் விவசாய பொருட்கள் மீதான ஆதரவு விலை குறித்து அரசு அறிவித்துள்ள குழுவில் 5 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் பிரதிநிதிகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், கோரிக்கைகள் மீது சாதகமான முடிவு எடுக்கப்பட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றுவிட்ட போதிலும் டெல்லி எல்லையில் முற்றுகை தொடர்வதில் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply