சவூதியில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இந்தியர்கள் மரணம்!

ரியாத் (04 டிச 2021): சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹம்மது ஜாபிர் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஜுபைல் நகரிலிருந்து ரியாத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ரியத்திலிருந்து 198 கி.மீ தூரத்தில் உள்ள அல்ரைன் என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. .

ஜாபிர் குடும்பத்தினருடன் பயணித்த வாகனம் அல் ரெய்ன் என்ற இடத்தில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த முஹம்மது ஜாபிர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அல் ரைன் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதத

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply