விவசாயிகள் போராட்டத்தை அடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் திடீர் முடக்கம்!

Share this News:

புதுடெல்லி (21 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் நீக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நேரடி வீடியோவைப் பகிர்ந்த பின்னர் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கத்தில் பதியப்பட்ட வீடியோ அதிலிருந்து திடீரென நீக்கப் பட்டதோடு, அந்த கணக்கும் முடக்கப்பட்டது.

மூன்று மணி நேரம் கழித்து கணக்கு மீட்டமைக்கப்பட்டது. அதில் பதியப்பட்ட பதிவு பேஸ்புக் சமூக விதிமுறைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில் பேஸ்புக் தங்கள் கணக்கைத் முடக்கியதாக கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கத்தின் அட்மின்கள் தெரிவித்தனர்.

பேஸ்புக்கின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை எழுப்பினர். இதன் பின்னர் கிசான் ஏக்தா மோர்ச்சாவின் பக்கம் மீட்டெடுக்கப்பட்டதாகவும், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவும் பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகத்தைத் தொடங்குவதாக ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் நேரடி வீடியோவில் அறிவித்ததைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அந்த பதிவில் மோடியின் அடுத்த மான்கிபாத்தின் ஒளிபரப்பின் போது பானைகளை எறிந்து விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் யோகேந்திர யாதவ் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply