சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முகமது அல்-பஸ்ஸாமி கூறுகையில், “சவூதி அரேபியாவில் குற்றவாளிகள் வாகனங்களில் பயணித்தால் அவர்களை பிடிக்கும் புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படும். குலுனா அமீன் இயங்குதள மேம்படுத்தல் நடந்து வருகிறது. குற்றவாளிகள் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் தருபவர்களால் அந்த இயங்குதளத்தில் புதுப்பிக்கப்படும். மக்காவில்,…

மேலும்...

துனிஷா சர்மாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை தற்கொலை!

மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10…

மேலும்...

பிரசவ வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

துபாய் (25 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசவ அறுவை சிகிச்சையின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெண் ஒருவர், அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் பிறப்பு வீடியோவை வெளியிட்டதற்காக 50,000 திர்ஹாம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த பெண் மருத்துவமனை மீதும், வீடியோ பதிவு செய்த மருத்துவர் மீதும் புகார் கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பிரசவத்தின்போது தன் அனுமதியைக் கூட…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் திடீர் முடக்கம்!

புதுடெல்லி (21 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் நீக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நேரடி வீடியோவைப் பகிர்ந்த பின்னர் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கத்தில் பதியப்பட்ட வீடியோ அதிலிருந்து திடீரென நீக்கப் பட்டதோடு, அந்த கணக்கும் முடக்கப்பட்டது. மூன்று மணி நேரம் கழித்து கணக்கு மீட்டமைக்கப்பட்டது. அதில் பதியப்பட்ட பதிவு பேஸ்புக் சமூக விதிமுறைகளுக்கு எதிரானது…

மேலும்...

சமூக வலைதள அவதூறு பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டம்!

கொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை கணினி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள…

மேலும்...

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டவர்கள் யார் யார்? – நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): “சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்த 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்!” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார். இவ் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று…

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தி சமூக வலைதளங்களில் பதிந்தவர்களுக்கு ரூ 1 கோடி அபராதம்!

துபாய் (20 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு அபராதம் மற்றும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிந்த மூன்று பேருக்கு தலா 5 லட்சம் திர்ஹம் (இந்திய ரூபாயில் 9,671,125) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதம் கட்டிய பிறகு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையை…

மேலும்...

திடீரென ஸ்தம்பித்த வாட்ஸ் அப்!

புதுடெல்லி (19 ஜன2020): வாட்ஸ் அப் சமூக வலைதளம் திடீரென ஸ்தம்பித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வாட்ஸ்அப் சேவை பாதிக்கப்பட்டதால் வாட்ஸ்அப் டவுன் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் பதிவேற்றம் ஆகாததால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும்...