ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

Share this News:

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர் கோழிக்கடைக்குச் சென்று ஹலால் இல்லாத கோழியைக் கோரினர். எனினும் ஹலால் இறைச்சி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால், பஜ்ரங் தள் அமைப்பினர் வியாபாரிகளை முற்றுகையிடத் தொடங்கினர்.

கோழிக் கடை உரிமையாளர் சையத் அன்சார் மற்றும் அவரது உறவினர் யூசுப் ஆகியோர் தங்களை பஜ்ரங் தள் ஆர்வலர்களான ஸ்ரீ காந்த், கிருஷ்ணா மற்றும் ஒரு குண்டர் தாக்கியதாகக் புகார் அளித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply