எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்!

Share this News:

புதுடெல்லி (21 செப் 2020): வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்த 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதியளிப்பு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மூன்று மசோதாக்களும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நாட்டில் எந்த மூலையிலும் விற்பனை செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த மசோதாக்களுக்கும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கும் சம்பந்தம் கிடையாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரசின் டெரெக் ஓ பிரையன், ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) சஞ்சய் சிங், காங்கிரசின் ராஜீவ் சதவ் மற்றும் சிபிஎம்மின் கே.கே.ரகேஷ் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

இந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply