திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது வன்புணர்வு குற்றமல்ல – டெல்லி நீதிமன்றம்!

இச்செய்தியைப் பகிருங்கள்:

புதுடெல்லி (17 டிச 2020): திருமண நிச்சயதார்த்தம் முடிவுற்ற நிலையில், திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது வன்புணர்வு குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீண்ட கால ஒருமித்த உடலுறவுக்குப் பிறகு துன்புறுத்தல் புகார் அளிப்பது அனுமதிக்கப்படாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் மீதான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு இந்த உத்தரவினை அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்த உத்தரவில், பல மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து, தொடர்ந்து உடலுறவு கொண்டபின், கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்பவர்களிடம் பணம் பணம் வசூலிக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும், இது சட்டத்தின் முன்பு துஷ்பிரயோகம் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

சில சந்தர்ப்பங்களில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு தரப்பினரை உடலுறவுக்கு ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடும். அதேவேளை இன்னொருவர் வேண்டாம் என்று சொல்ல விரும்பலாம், . இதுபோன்ற வழக்குகளில் மட்டுமே குற்றமாக கருதப்படும். என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply