நிதிஷ்குமார் பிரச்சார கூட்டத்தில் லாலு பிரசாத்துக்கு ஆதரவான கோஷம் – நிதீஷ் ஆவேசம்! (VIDEO)

Share this News:

பாட்னா (21 அக் 2020): பீகாரில் நிதிஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் லாலுபிரசாத் யாதவுக்கு ஆதரவாக பொதுமக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பீகார் சட்டசபைக்கு வரும் 28-ந்தேதி, அடுத்த மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

மேலும் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது., இந்நிலையில் . சரண் மாவட்டத்தில் நிதிஷ்குமார் பிரச்சாரத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்குள்ள மக்கள் “லாலு ஜிந்தாபாத்” என்ற முழக்கத்தை முழக்கமிட்டனர். இதனால் நிதீஷ்குமார் கடும் கோபமடைந்தார். மேலும் லாலுவை வாழ்த்திய மக்கள் நிதிஷ்குமார் மேடையை நோக்கி வந்தனர்.

அப்போது “நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், பிரச்சனையில்லை அதற்காக லாலுவை வாழ்த்தி இங்கே கோஷமிடாதீர்கள் , இங்கிருந்து இத்தகைய சத்தம் போடாதீர்கள்” என்று நிதீஷ் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் இல்லாமல் இந்த சட்டசபை தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply