சொந்த சகோதரியை வன்புணர்ந்த கொடூர சகோதரன்!

Share this News:

ஜெய்ப்பூர் (24 மே 2020): ராஜஸ்தானில் சொந்த தங்கையை சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து வன்புணர்ந்து கொலை செய்துள்ளான்.

ஜெய்ப்பூர் மாவட்டம் மனோஹர்பூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு ஒரு சாக்கடையில் கிடப்பது தெரிய வந்தது.

உடற்கூறு பரிசோதனையில் அப்பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரன் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொந்த சகோதரனே தங்கையை வன்புணர்ந்து கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: