இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Share this News:

பாட்னா (22 ஜூலை 2022): இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் பயணி ஒருவர் பயணிப்பதாக வந்த தகவலை அடுத்து வியாழக்கிழமை இரவு பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் 6E2126 அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனை அடுத்து வெடிகுண்டு வைத்திருந்ததாக கூறிய ரிஷி சந்த் சிங் என்ற அந்த பயணியை விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பயணி மனநிலை சரியில்லாதவர் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்புப் படை விரைந்து வந்தது.
ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.


Share this News:

Leave a Reply