கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் படுதோல்வி!

Share this News:

கொல்கத்தா (22 டிச 2021): மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 வார்டுகளில் பாரதிய ஜனதா 3, காங்கிரஸ் 2, இடதுசாரிகள் 2 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றிமுகத்தில் இருந்தனர். இப்படியாக தனது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒற்றை இலக்கத்தில் நிற்கவைத்து, மூன்றிலக்க எண்ணில் முன்னணி வகித்து வெற்றி பெற்றுள்ளார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

இதுகுறித்து தெரிவித்த மம்தா பானர்ஜி, மற்ற தேசிய கட்சிகள் அனைத்தும் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், “மக்களால் மக்களுக்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு இது” என்றும் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply