தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு – அமைச்சர் தகவல்!

Share this News:

சென்னை (23 டிச 2021): தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்முலம் தமிழகம் இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது.

ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 34 ஆக அதிகரித்துள்ளது. சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன; அதில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்; ஒருவர் கேரளாவிலிருந்து வந்தவர். சென்னையில் 26 பேர், மதுரையில் 4, திருவண்ணாமலையில் 2, சேலத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply