பிஹாரில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சி?

Share this News:

பாடனா (09 ஜூலை 2022): பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் அலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே
பிகாரில் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று உறுதியான குறிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிகாரில் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சோனியா காந்தியை ஞாயிற்றுக்கிழமை, நிதிஷ் குமார் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த உரையாடலின் போது எது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.


Share this News:

Leave a Reply