பீகாரில் முடிவுக்கு வந்தது பாஜக நிதிஷ் கூட்டணி!

Share this News:

பாட்னா (09 ஆக 2022); பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் முதல்வர் நிதிஷ்குமார்.

மேலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடித்தத்தையும் ஆளுநரிடம் வழங்கினார் நிதிஷ்குமார். இதன் மூலம் பாஜக நிதிஷ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து பாட்னாவில் இன்று லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். மேலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். இச்சந்திப்பின் போது ஜேடியூ எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நிதிஷ்குமாருடன் ராஜ்பவன் சென்றிருந்தனர்.


Share this News:

Leave a Reply