அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

Share this News:

சென்னை (22 ஜன 2021): பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply