கேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்!

Share this News:

திருவனந்தபுரம்(07 ஆக 2020): கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் மாயமாகியுள்ளனர்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.

இந்நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் அந்த குடியிருப்பில் இருந்தவர்களில் சிலர் தமிழகத்தை சேர்ந்தவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Share this News:

Leave a Reply