கொடூரத்தின் உச்சம் – 3 வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

180

லக்னோ (12 பிப் 2020): உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  டெல்லி கலவரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட 85 வயது மூதாட்டி!

இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் அதிர வைக்கும் தகவலை தந்தனர். குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பெற்றோர்கள் புகார் அளித்ததன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜு என்ற கொடூரனை போலீஸார் கைது விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.