சவூதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (13 டிச 2022): குளிர்காலம் கடுமையாக இருப்பதால் சவுதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களை விட இம்முறை சவூதியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அப்துல் அலி கூறினார். தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வானிலை தொடர்பான நோய்களின்…

மேலும்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (12 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு முதல் வியாழன் வரை மிதமானது முதல் பலத்த மழை, இடி, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா, தாயிப் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக…

மேலும்...

துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

துபாய் (10 டிச 2022): கேரளாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டில் இருந்து சென்றது. சனிக்கிழமை துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

மேலும்...

மோசமான வானிலை – அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (10 டிச 2022): மோசமான வானிலை காரணமாக வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அபுதாபியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு, பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...

சவூதியில் வாட் (வரி) மற்றும் வெளிநாட்டவர்களுக்கான லெவியில் மாற்றமில்லை!

ரியாத் (09 டிச 2022): சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. “கோவிட் காலத்தில், உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படாது. தற்போதைக்கு தற்போதைய முறை தொடரும்” என்று சவுதி அரேபிய நிதியமைச்சர் முகமது அல் ஜடான் அறிவித்துள்ளார். “சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கான லெவியில், காப்பீடு உட்பட 12,000 ரியால்களுக்கு மேல் செலவிடுவார். பட்ஜெட்டில் இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. வெளிநாட்டவர்களின்…

மேலும்...

சக ஊழியரை மிரட்டிய மேலாளருக்கு அபராதம் விதித்த துபாய் நீதிமன்றம்!

துபாய் (07 டிச 2022): சக ஊழியரை மிரட்டியதற்காக மருந்தக மேலாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அபராதம் விதித்தது. மருந்தக மேலாளருக்கும், சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால், சக ஊழியரையும், அவரது மகனையும் கொன்றுவிடுவதாக மேலாளர் மிரட்டியுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தால் 10000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலாளர் தன்னையும் தனது எட்டு வயது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இந்த…

மேலும்...

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து கத்தார் வந்திருக்கிறார். இவர் நாஜிரா நவ்ஷாத் என்ற இளம்பெண். திருமணமாகி கணவர் குழந்தைகளோடு வசித்தாலும், தனிமைப் பயணத்தில் மிகவும் நாட்டமுடையவர். சிறுவயது முதல் அர்ஜென்டினாவின் தீவிர ரசிகையான இவர், கத்தாரில் நடைபெறும் FIFA World Cup 2022 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில்…

மேலும்...

சவூதியில் பெற்றோர் ஸ்பான்ஷர்ஷிப்பில் உள்ள 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

ரியாத் (07 டிச 2022): சவூதியில் பெற்றோர் ஸ்பான்ஷர்ஷிப்பில் உள்ள 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாஸ்போர்ட் துறை தெரிவித்துள்ளது அதேபோல திருமணமான பெண்கள் கணவரின் பெயருக்கு ஸ்பான்சர்ஷிப்பை மாற்ற வேண்டும் என்றும் ஜவாசத் தெளிவுபடுத்தியுள்ளது. தாய் அல்லது தந்தையின் சார்பு விசாவில் இருக்கும் ஆண் குழந்தைகள் 25 வயதை அடைந்தவுடன் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்ற வேண்டும் என்று ஜவாசத் தெளிவுபடுத்தியது. 25 வயது நிறைவடைந்த ஆண் குழந்தைகள் பெற்றோரின்…

மேலும்...

துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 15 ல் தொடக்கம்!

துபாய் (06 டிச 2022): துபாய் ஷாப்பிங் திருவிழா இம்மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. ஷாப்பிங் திருவிழாவை ஒட்டி, இம்முறையும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன துபாய் ஷாப்பிங் திருவிழா ஜனவரி 15 முதல் ஜனவரி 29 வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இம்முறை மெகா ரேஃபிள் டிரா மூலம் நிசான் பேட்ரோல் கார் மற்றும் 100,000 Dhs ஒவ்வொரு நாளும் வெல்லும் வாய்ப்பு உள்ளது….

மேலும்...

ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் வசதிகள் மூடல்!

ஷார்ஜா (06 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பல இடங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் இலவசமாக நிறுத்தலாம். இந்த இடங்களை அதிகாரிகள் ஒவ்வொன்றாக மூடி வருகின்றனர். எமிரேட்டின் அழகு மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அதிக வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ​​ஷார்ஜாவில் சுமார் 57,000 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. இவை முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து…

மேலும்...