ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்!

துபாய் (16 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் 18 வயதுக்குட்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வது உட்பட பல விதிகளைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மனிதவள அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் புதிய சட்டத்தை அறிவித்தது. புதிய சட்டத்தின்படி…

மேலும்...

பொதுமக்களை கவரும் ரியாத் பழங்கால தீரா வணிக மையம்!

ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவின் பழங்கால சந்தையான ‘ தீரா வணிக மையம் (தீரா சூக்)’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரியாத் சீசனின் ஒரு பகுதியாக சவூதி மக்கள் பழங்கால உடையணிந்து வருவதால் அதனைக் காண பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். ஒரு நூற்றாண்டு பழமையான சந்தையில் அரபு நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறையின் கண்கவர் காட்சிகளுக்காக மக்கள் அங்கு கூடுகின்றனர். சவூதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பழங்கால வாழ்க்கை முறைகள் மற்றும்…

மேலும்...

மதீனாவிற்கு 8 கோடிக்கும் அதிகமான யாதரீகர்கள் வருகை!

மதீனா (16 டிச 2022): மதீனாவில் உள்ள ஹரம் மசூதியில் 5 மாதங்களில் 8 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் தொழுகை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஹரம் விவகாரத் துறைத் தலைவர் ஷேக் அப்துர்ரஹ்மான் சுதைஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹிஜ்ரா ஆண்டின் தொடக்கமான முஹர்ரம் முதல் கடந்த 12 நாட்கள் வரை தொழுகையை நிறைவேற்றிய பெண்கள் உட்பட யாத்திரிகர்களின் எண்ணிக்கை இதுவாகும். இந்த காலகட்டத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரவுதா…

மேலும்...

மோசமான கால நிலையால் சவூதியில் வேலை நாட்களை மாற்ற பரிந்துரை!

ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவில், மோசமான காலநிலையில் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு வர வேண்டாம் என நிர்வாகம் மற்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரியாத் உட்பட சவூதி அரேபியாவின் பல நகரங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழை, புயல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். முக்கியமாக, பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் பணி செய்யும் இடத்திற்குச் சென்று சேர திணறி வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வீட்டில் இருந்தபடி…

மேலும்...

உலகக் கோப்பை ஜுரத்தின் இடையே குளிர் காலத்தை வரவேற்கும் கத்தார்!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் குளிர் அதிகமாக உள்ளது. நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 செல்சியஸ் பாகையாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் பதிவாகியுள்ளது. மிசைட் (13), வக்ரா (16), தோஹா விமான நிலையம் (18), கத்தார் யூனி (17), அல் கோர் (14), கரானா (14), அபு சாம்ரா (16) மற்றும் குவைரியா (16) செல்சியசாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தோஹா நகரில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும்,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

துபாய் (14 டிச 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட் விசாவில் இருப்பவர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி பின்னரே விசாவை புதுப்பிக்க வேண்டும்; இந்த நடைமுறை ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளுக்கு பொருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட்விசாவில் இருப்பவர்களுக்கு நாட்டிற்குள்ளிருந்து விசாவை மாற்றும் வசதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் அமலுக்கு வந்தது. ஆனால் துபாயில் தற்போதைய நிலையே தொடரும். புதிய முடிவின் மூலம், உங்கள்…

மேலும்...

தேசிய தினத்தை கொண்டாட தயாராகும் பஹ்ரைன் – விடுமுறை அறிவிப்பு!

மனாமா (14 டிச 2022): பஹ்ரைன் தனது 16வது தேசிய தினத்தை இம்மாதம் வரவேற்கும் இறுதிக்கட்ட ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 16 முதல் 19 வரை அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதிகளின் இருபுறமும் பஹ்ரைன் தேசியக் கொடிகள் மற்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் வண்ணமயமான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் வீதிகள் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் பிரதமர் மற்றும் பட்டத்து…

மேலும்...

உம்ரா விசாக்களின் எண்ணிக்கை இதுவரை 40 லட்சமாக உயர்வு!

ஜித்தா (14 டிச 2022): இந்த ஆண்டு உம்ரா சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 40 லட்சம் உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. உம்ரா விசா வழங்குவதற்கு மின்னணு முறை அறிமுகப்படுத்தப்பட்டதே விசாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம். ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் இணையதளம் மூலம் வெளிநாட்டிலிருந்து யாத்ரீகர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருபவர்களும் இப்போது உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். உம்ரா விசாவில் சவூதி அரேபியாவுக்கு…

மேலும்...

ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (13 டிச 2022): குளிர்காலம் கடுமையாக இருப்பதால் சவுதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களை விட இம்முறை சவூதியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அப்துல் அலி கூறினார். தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வானிலை தொடர்பான நோய்களின்…

மேலும்...