மவுனம் கலைத்த ராகுல் காந்தி!

புதுடெல்லி (20 டிச 2020): மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய…

மேலும்...

முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல்!

ஸ்ரீநகர் (19 டிச 2020): ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான ஃபாரூக் அப்துல்லாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நிதி மோசடி செய்ததாகக் கூறிது. மொத்தம் ரூ .1186 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நிதிக் குற்றங்கள் தொடர்பாக ஃபாரூக் அப்துல்லா உட்பட மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது . இந்த வழக்கு தொடர்பாக ஃபாரூக்…

மேலும்...

உத்திர பிரதேச அரசின் மதமாற்ற தடை சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு!

புதுடில்லி (19 டிச 2020): உத்திர பிரதேச அரசு கொண்டு வந்துள்ள புதிய மதமாற்ற தடை சட்டம், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னாள் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தேசிய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி ஏ.பி. ஷா,உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் இந்த சட்டத்தினை கடுமையாக விமர்சித்துள்ளனர். உ.பி.யின் இந்த மதமாற்ற தடை சட்டத்தின்படி , இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மதம் மாறி திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற…

மேலும்...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைவதற்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு

கொல்கத்தா (19 டிச 2020): மேற்கு வங்கத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தனது அரசியல் சூழ்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜகவில் இணைவதற்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுவேண்டு ஆதிகாரி பாஜகவில் இணைகிறார். திரிணாமுல் மூத்த தலைவர் சுவேந்து ஆதிகாரியைத் தவிர, மேலும் இரண்டு…

மேலும்...
Sonia Gandhi

காங்கிரசுக்கு புதிய தலைவர் – பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று ஆலோசனை!

புதுடில்லி (19 டிச 2020): : காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும், கட்சியின் மூத்த தலைவர்களுடன், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சி வரும் ஜனவரியில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கட்சியின் தலைவராக ராகுலை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சோனியா விரும்புகிறார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களுடனும், அதிருப்தி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த, அவர் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, டில்லியில், கட்சியின் தலைமை அலுலகத்தில்…

மேலும்...

ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு வழக்கில் திடீர் திருப்பம்!

லக்னோ (18 டிச 2020): உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கண்டறிந்துள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹத்ராஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை…

மேலும்...

குடியரசு தினத்தில் அயோத்தியில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா!

அயோத்தி (18 டிச 2020): 2021 ஜனவரியில் இந்திய குடியரசு தினத்தன்று உத்திர பிரதேசத்தில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் தளத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழி வகுத்ததுடன், மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியின் சோஹவல்…

மேலும்...

ராமர் கோவிலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் முடிச்சு போடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (18 டிச 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிடிக்காதவர்களே விவசாயிகள் போராட்டத்தை பின்னின்று இயக்குகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். விவசாய சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிடிக்காதவர்கள் விவசாயிகளை உசுப்பேற்றி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க விரும்பாத மக்கள் போராட்டத்தின் பின்னால் உள்ளனர். ஆதரவு…

மேலும்...
Supreme court of India

விவசாயிகள் போராட முழு உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது. மேலும் மறு விசாரணையை ஜனவரி வரை ஒத்திவைத்துள்ளது. மேலும் விவசாய சட்டங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை இப்போது ஆராயப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. விவசாயிகளின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்த அதே நேரத்தில், விவசாயிகளுக்கு போராடும் உரிமை உண்டு, அதில் நீதிமன்றம் தலையிட…

மேலும்...

யோகி ஆதித்யநாத் அரசுக்கு பலத்த அடி – டாக்டர் கஃபீல்கானுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

புதுடெல்லி (17 டிச 2020): யோகி ஆதித்யநாத் அரசு டாக்டர். கபீல்கான் மீது சுமத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) ரத்து செய்ததற்கு எதிராக உ.பி. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டாக்டர் கபில் கான் மீது சுமத்தப் பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

மேலும்...