இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி!

புதுடெல்லி (13 ஏப் 2021): இந்தியாவில் ஏற்கனவே ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெற, தடுப்பூசியை உள்நாட்டில் ஆய்வு செய்திருக்க வேண்டும். தற்போது இந்த விதியிலிருந்து வெளிநாட்டில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தடுப்பூசிகள், இந்தியாவில் அவரசகால அனுமதி வாங்க இந்தியாவில் ஆய்வு மேற்கொள்ள தேவையில்லை. தேசிய நிபுணர்…

மேலும்...

தேர்தல் ஆணையத்திற்கு மோடி ஆணையம் என பெயர் வைக்கலாம் – மம்தா சாடல்!

கொல்கத்தா (11 ஏப் 2021): தேர்தல் ஆணையத்தின் பெயரை ‘மோடி ஆணையம் ‘ என்று மாற்ற வேண்டும் என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் கலவர பூமியாகியுள்ள கூச் பெஹார் மாவட்டத்திற்கு எந்த அரசியல் தலைவரும் 72 மணி நேரம் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அங்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்ததை அடுத்து…

மேலும்...

மசூதி குறித்த நீதிமன்ற உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது – முஸ்லீம் சட்டவாரியம் கண்டனம்!

புதுடெல்லி (11 ஏப் 2021): வாரணாசியில் உள்ள கயன்வாபி மசூதியின் இடத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திற்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அவசியமற்றது என்று (AIMPLB) அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. 1991 சட்டத்தின்படி, 1947 இல் தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்க வேண்டும். இந்த சட்டம் இருக்கும்போது, ​​கியான்வாபி மசூதியின் இருப்பிடம் குறித்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும், இது 1991 சட்டத்திற்கு…

மேலும்...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா!

புதுடெல்லி (10 ஏப் 2021): இதுவரை இல்லாத அளவில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் . ஊரடங்கு குறித்து முடிவு செய்ய மாலை மகாராஷ்டிராவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளது . . நாட்டில் கோவிட் இரண்டாவது அலைக்கு சிகிச்சையளிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சோனியா காந்தி கோவிட்…

மேலும்...

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் கோவிட் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி!

புதுடெல்லி (09 ஏப் 2021): இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது கோவிட் அலை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையிலும் கோவிட் தடுப்பூசி பற்றாக்குறை என்கிற தகவலும் பரவி வரும் நிலையில் ,ஜான்சன் & ஜான்சன் மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்லது. பிரதமர்கள் முதல்வர்களுடனான கூட்டத்தின்போது,​​பல மாநிலங்கள் தடுப்பூசிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தன. ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சோதனை விரைவில் தொடங்கப்படும்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கலில் அதிர்ச்சி!

லக்னோ (09 ஏப் 2021): உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி பெற வந்த மூன்று பெண்களுக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதையொத்த சரோஜ், அனார்கலி மற்றும் சத்தியாவதி ஆகிய மூன்று பெண்களுக்கு கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக அம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊசி பெற்றவர்களிடம் ஆதார் தகவல்கள் எதுவும் பெறாமல் தடுப்பூசி போட்டதாகவும் தடுப்பூசி பெற்ற பின்னர் சில அசவுகரியங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊசி பெற்றவர்கள் தெரிவித்ததை அடுத்து இவ்விவகாரம்…

மேலும்...

பாதுகாப்பு படை வீரர்கள் பலி – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (05 ஏப் 2021): சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் உயிர்தியாகம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மோசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறமையற்ற செயல்பாட்டால்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உளவுத்துறையின் தோல்வி…

மேலும்...

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு!

அகமதாபாத் (31 மார்ச் 2021): இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று போலீஸ்காரர்களை அலகாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு சிபிஐ நீதிபதி வி.ஆர்.ராவல், போலீஸ் அதிகாரிகளான ஜி.எல். சிம் கால், தருண் பரோத் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரை விடுவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க குஜராத் அரசு அனுமதி மறுத்து வருவதாக மார்ச் 20 அன்று சிபிஐ…

மேலும்...

கர்ப்பிணிப் பெண்ணை சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி!

ஒடிசா (30 மார்ச் 2021): ஒடிசாவில் கர்ப்பிணிப் பெண்ணை மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்துள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் குருபாரி என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவர் விக்ரம் பிருலி-யும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் போலீஸ் ஹெல்மெட் பரிசோதனை நடத்தி வந்தனர். பரிசோதனையின்போது வாகனம் ஓட்டிவந்த விக்ரம் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் அவர் மனைவி குருபாரி உடல்நலக் காரணங்களால்…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்படுத்த 5 அம்ச திட்டம்!

புதுடெல்லி (28 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்…

மேலும்...