ஹிஜாபுக்காக தேர்வை கைவிட வேண்டாம் – முஸ்லீம் மாணவிகளுக்கு அமைச்சர் கோரிக்கை!

பெங்களூரு (27 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் ஈகோவை விட்டு தேர்வில் கலந்துகொள்ள வேண்டி கர்நாடகா கல்வி அமைச்சர் நாகேஷ் மாணவிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிஜாப் அணிய வலியுறுத்துவார் சொல்லை கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறியுள்ள அமைச்சர் நாகேஷ் தேர்வுக்கு வராதவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மறுதேர்வு நடத்தப்படும். “இதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார். மேலும் ஹிஜாப் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தும் மாணவர்கள் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலந்து கொள்வார்கள் என்று…

மேலும்...

எட்டு குடும்ப உறுப்பினர்கள் கூண்டோடு எரித்துக் கொலை – நீதி வேண்டி கோரிக்கை!

கொல்கத்தா (26 மார்ச் 2022): மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த தீ வைப்புத் தாக்குதலில், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் ஒரு கும்பலால் அவர்களின் வீடுகளில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். திங்களன்று உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸின் பஞ்சாயத்துத் தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் இந்தப் படுகொலை நிகழ்ந்தது. வன்முறை தொடர்பாக இதுவரை 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தடயவியல்…

மேலும்...

மாட்டுக்கறிக்காக பசுவை விற்ற கோவில் தலைவர் மீது வழக்குப்பதிவு!

ஐதராபாத் (26 மார்ச் 2022): பசுவை இறைச்சிக்காக விற்ற கோவில் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் கோமட்வாடியில் அமைந்துள்ள போச்சம்மா கோயிலின் தலைவர் டி.பிரேம் குமார் எனப்வர், கோயிலின் பசுவை அங்குள்ள உள்ள இறைச்சிக் கூடத்துக்கு விற்றுள்ளார். இந்த குற்றத்தில் குழு உறுப்பினர் எட்லா மகேந்தர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அகில பாரத கௌ சேவா அறக்கட்டளையின் பிரதிநிதி ஏ.பால கிருஷ்ணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் டபீர்புரா…

மேலும்...

முஸ்லிம் பெயரில் போலி வலைத்தள பக்கத்தில் வகுப்புவாத கருத்துக்களை பதிவிட்டவர் கைது!

பெங்களூரு (25 மார்ச் 2022): கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் சமூக விரோத கருத்துகளை பதிவிட்ட சித்தரோதா ஸ்ரீகாந்த் நீராலே (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் டி.எச்.சங்கர்மூர்த்தியின் மகனான கர்நாடக பாஜக எம்எல்சி டி.எஸ்.அருணுக்கு சமூக வலைதளத்தில் முஷ்டாக் அலி என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். எம்.எல்.சி.யின் புகாரின் அடிப்படையில், ஷிவமோகாவில் உள்ள சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

மேலும்...

மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாட முடிவு!

லக்னோ (25 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநில மதரசாக்களில் வகுப்புகள் தொடங்கு முன்பு தேசிய கீதம் பாட மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யவும், மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மே 14 மற்றும் மே 27 க்கு இடையில் நடைபெறும் ஆறு பாடங்களுக்கான தேர்வுகளை மதரசா வாரியம் நடத்தும் என்றும்…

மேலும்...

ஹிஜாப் தடை விவகாரம் – உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

புதுடெல்லி (24 மார்ச் 2022): தேர்வு நெருங்கி வருவதால் ஹிஜாப் தடை விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய முஸ்லீம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத…

மேலும்...

காஷ்மீரில் பண்டிட்டுகளைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் – சஜாத் லோன்!

புதுடெல்லி (23 மார்ச் 2022): 1990களில் பண்டிட்களை விட காஷ்மீரி முஸ்லிம்கள் 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டின் தலைவர் சஜாத் லோன் கூறியுள்ளார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள லோன், படம் ஒரு கற்பனைப் படைப்பு. என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்,”காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீரி முஸ்லிம்கள் பண்டிட்களை விட 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டாக்களால் என் தந்தையை…

மேலும்...

முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

கோவில் கட்டுவதற்கு ரூ. 2.5 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய முஸ்லிம்கள்!

பாட்னா (22 மார்ச் 2022): பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண மந்திர் கட்டுவதற்காக 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது. திங்களன்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், “குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர் இஷ்தியாக் அகமது கான்,குடும்பத்தினர் எங்களுக்கு கோவில் கட்ட…

மேலும்...

மாடு கடத்தியதாக வதந்தி – முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

லக்னோ (22 மார்ச் 2022): உத்தரப் பிரதேசத்தில், மாடு கடத்தியதாகக் கூறி, பசுக் குண்டர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளின் கழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுநராக 35 வயது அமீர் என்பவர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...