ஹிஜாப் அணிய தடை – மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்டம்!

பெங்களுரு (21 மார்ச் 2022): ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு வரமுடியாத மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு செல்ல முடியாததால் தேர்வு எழுத முடியவில்லை. இந்நிலையில் தேர்வு எழுத முடியாத மாணவிகளுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

மேலும்...

இனி தவறான செய்திகளை அனுப்பினால் உங்கள் வாட்ஸ் அப் முடக்கப்படலாம்!

புதுடெல்லி (21 மார்ச் 2022): Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp பயனர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்பச் சட்ட விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் சேவை அளித்துவரும் பெரிய சமூக வலைத்தளங்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், வாட்ஸ்அப் கடந்த மாதங்களில் லட்சக் கணக்கிலான கணக்குகளை முடக்கியதாக தகவல் வெளியிட்டிருந்தது….

மேலும்...

லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் ஷரத் யாதவின் எல்ஜேடி இணைந்தது!

புதுடெல்லி (20 மார்ச் 2022): சரத் யாதவின் எல்ஜேடி லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது. டெல்லியில் உள்ள ஷரத் யாதவ் இல்லத்தில் இணைப்பு விழா நடைபெற்றது. இணைப்பு குறித்து பேசிய சரத் யாதவ் “ஆர்ஜேடியுடன் எங்கள் கட்சி இணைவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். இப்போது நமது முன்னுரிமை ஒற்றுமைதான். அப்போதுதான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு யார் தலைமை தாங்குவது…

மேலும்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் பொய்யான தகவல்களை பரப்பும் சினிமா : காஷ்மீர் முன்னாள் முதல்வர் கருத்து!

புதுடெல்லி (19 மார்ச் 2022): தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். 1990ஆம் ஆண்டில் காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா,…

மேலும்...

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

பெங்களூரு (18 மார்ச் 2022): ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடியாத முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணியாமல் தேர்வெழுத மற்றொரு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் பல மாணவிகள் நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு முன்பு ஹிஜாப் விவகாரத்தால் தேர்வை புறக்கணித்தனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற பாஜக…

மேலும்...

2 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மீண்டும் திறப்பு!

புதுடெல்லி (17 மார்ச் 2022): கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டு மூடப்பட்ட டெல்லி , நிஜாமுதீன் மார்க்கஸ் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. கோவிட்-19 நெறிமுறைகளை மர்கஸ் வருபவர்கள் பின்பற்றுவதை மசூதி நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறியதை அடுத்து , டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மார்க்கஸின் மூன்று தளங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவில், மசூதி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் மார்ச் 18 ஆம் தேதி ஷப்-இ-பாரத்திற்கு ஒரு நாள்…

மேலும்...

ஹிஜாப் அனுமதி கோரிய மாணவிகளை பயங்கரவாதிகள் என அழைத்த பாஜக தலைவர்!

உடுப்பி (17 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகள் “தேச விரோதிகள்” மற்றும் “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார். இதுகுறித்து சுவர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்றத்தை அணுகியது மாணவிகள் அல்ல, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறிக்கைகள் கொடுப்பதன் மூலம் கற்றறிந்த நீதிபதிகளை…

மேலும்...

ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்த காங்கிரஸ் தலைவர் சித்து!

புதுடெல்லி (17 மார்ச் 2022): 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். 5 மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர்களை இராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை இராஜினாமா செய்த அடுத்த நாள்,…

மேலும்...

எனக்கு வேறு வழி தெரியவில்லை – ஹிஜாப் தடை உத்தரவால் சிக்கித்தவிக்கும் மாணவி!

உடுப்பி (17 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்தப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கல்வி நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளன. சில மாணவிகள் முக்காடுகளை அகற்றிவிட்டு வகுப்புகளுக்குச் செல்ல முன்வந்துள்ளனர். உடுப்பியில் உள்ள அரசு எம்ஜிஎம் கல்லூரியின் மாணவி ஒருவர், தனது முக்காடை அகற்றிவிட்டு வகுப்பறைக்குச் செல்ல முடிவு செய்தபோது வகுப்பறையில் தனக்கு…

மேலும்...

ஹோலி பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை மாற்ற வலியுறுத்தல்!

லக்னோ (17 மார்ச் 2022): ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை அன்று இருப்பதால் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை மாற்றி அமைக்க இந்திய இஸ்லாமிய மையம் வலியுறுத்தியுள்ளது. அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட, ஹோலி பண்டிகை அதே நாளில் கொண்டாடப்படும் என்பதால், வெள்ளிக்கிழமை தொழுகையின் நேரத்தை மாற்றுமாறு மசூதிகளை இந்திய இஸ்லாமிய மையம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப அமைதி மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று லக்னோ இஸ்லாமிய மையத்தின் தலைவர்…

மேலும்...