மதுரா வாரணாசியை அடுத்து இந்துத்துவாவினர் குறிவைக்கும் இன்னொரு மசூதி!

பதாவுன்(17 செப் 2022): உத்திர பிரதேசம் பதாவுன் ஜும்மா மசூதி முன்பு நீல்காந்த் மகாதேவா கோவிலாக இருந்தது என்று இந்துத்துவா சிந்தனையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில அழைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் முகேஷ் படேல் என்பவர் , பதாவுனில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பதாவுனில் உள்ள ஜும்மா மசூதி வளாகம் ஒரு காலத்தில் இந்து மன்னர் மகிபாலின் கோட்டையாக இருந்ததாகவும், இந்த மசூதி, முஸ்லீம் ஆட்சியாளர்…

மேலும்...

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் உரிமம் ரத்து!

மும்பை (17 செப் 2022): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிக்கும் உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிர எஃப்.டி.ஏ. அரசாங்க நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் குழந்தைகளின் தோலை பாதிக்கக்கூடும் என்று ஆய்வக சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத்…

மேலும்...

உருது மொழியில் பெயர் பலகைக்கு எதிர்ப்பு? – உத்தரவிட்ட முஸ்லிம் அதிகாரி நீக்கம்!

லக்னோ (15 செப் 2022): உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் உருது மொழியில் பெயர் பலகைகள் பொருத்த உத்தரவிட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர். தபசும் கான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி பிறப்பித்த உத்தரவில், அரசு மருத்துவமனைகளில் சைன்போர்டுகள் மற்றும் பெயர்ப் பலகைகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் உருது மொழியில் எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு சிஎம்ஓக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக உருது இருந்தாலும்,…

மேலும்...

மதுராவில் மற்றொரு மசூதியை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் மனு!

மதுரா (15 செப் 2022): உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மொகலாயர் கால மீனா மசூதியை அகற்றக் கோரி மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகாசபாவின் (ABHM) தேசிய பொருளாளர் தினேஷ் ஷர்மா, மதுரா சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) மதுரா, ஜோதி சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தாக்கூர் கேசவ் தேவ் ஜி கோவிலின் ஒரு பகுதியில்…

மேலும்...
Sonia Gandhi

மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது….

மேலும்...

சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக ராகுல் காந்தி மீது புகார்!

புதுடெல்லி (14 செப் 2022): பாரத் ஜோடோ யாத்ராவை சட்ட ரீதியாக சிக்கலாக்க தேசிய குழந்தைகள் நலக் குழு மூலம் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான கன்னியாகுமரி-காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்திரை குழந்தைகளை அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த…

மேலும்...

மூன்றரை வயது சிறுமி பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம்!

போபால் (13 செப் 2022): மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றரை வயது சிறுமியை பள்ளி பேருந்து ஓட்டுனர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஒரு முக்கிய பள்ளியில் படிக்கும் மாணவி. பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த போது பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது பேருந்தில் பள்ளியின் பெண் ஊழியரும் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக…

மேலும்...

சித்திக் கப்பனை விடுதலை செய்வதில் தாமதம்!

லக்னோ (13 செப் 2022): சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதான அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அவர் விடுதலை ஆவது தாமதமாகலாம் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2020 அக்டோபரில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் தலித் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்று கொண்டிருந்தபோது சித்திக் கப்பன் கைது செய்யப்பட்ட பின்னர் சிறையில்…

மேலும்...

முதல்வர் ஷிண்டே நிகழ்ச்சியில் மாட்டு மூத்திரம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்!

மும்பை (13 செப் 2022): மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் மாட்டு மூத்திரத்தை தெளித்தனர். அவுரங்காபாத்தில் உள்ள பிட்கின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பானையில் கொண்டு வரப்பட்ட மாட்டு மூத்திரத்தை மேடையிலும், வழியிலும் த்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் தெளித்து வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக ஷிண்டே தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை. உத்தவ் தாக்கரே…

மேலும்...