மூன்றரை வயது சிறுமி பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம்!

Share this News:

போபால் (13 செப் 2022): மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றரை வயது சிறுமியை பள்ளி பேருந்து ஓட்டுனர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஒரு முக்கிய பள்ளியில் படிக்கும் மாணவி. பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த போது பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது பேருந்தில் பள்ளியின் பெண் ஊழியரும் இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரனை மேற்கொள்ள மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். பள்ளி அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்கப்படும் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமி தனது பிறப்புறுப்பு பகுதியில் வலி இருப்பதாக பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். சிறுமியிடம் விசாரித்ததில் பேருந்து ஒட்டுநர் இந்த கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மறுநாள் குடும்பத்தினர் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து பேருந்து ஓட்ட்நரையும், பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது IPC 376 A8 மற்றும் POCSO பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் மருத்துவ அறிக்கைக்குப் பிறகு மேலதிக நடவைக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply