மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!

Sonia Gandhi
Share this News:

புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு செப்டம்பர் 22-ம் தேதி வெளியிடப்படும். செப்டம்பர் 24 முதல் 30 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8 கடைசி நாளாகும். 17ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19ம் தேதி முடிவும் அறிவிக்கப்படும். ஆனால் இதற்கு முன் சோனியா காந்தியை தலைவராக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற பரிந்துரைக்கப்படுகிறது

ஆனால் காந்தி குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்கள் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும் என்று சோனியா காந்தி முன்பு கூறியிருந்தார். அசோக் கெலாட் போன்ற மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


Share this News:

Leave a Reply