பாஜக எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மரணம்!

ஜெய்ப்பூர் (30 நவ 2020): கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்தான் மாநில பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஈ கிரண் மகேஸ்வரி (வயது 59). இவர் கடந்த வாரம், இவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்….

மேலும்...

நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் போராட்டத்திற்கு அழைப்பு – திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது, மத்திய அரசு போராட்டத்தை நிபந்தனைகளுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். “இந்த விவசாய…

மேலும்...

அஸாதுத்தீன் உவைசிக்கு முஸ்லீம் லீக் ஆதரவு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகராட்சி தேர்தலில் ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐ ஆதரிப்பதாக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் AIMIM வேட்பாளர்களை ஆதரிப்பதாக தெலுங்கானா முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக இங்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்….

மேலும்...

அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு!

புதுடெல்லி (29 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். டெல்லியில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிசம்பர் 3 ம் தேதி விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்திருந்தார். புராடியில் உள்ள சமரவேதிக்கு போராட்ட இடத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால்…

மேலும்...

நமக்கு உணவளிப்பவர்களின் கோரிக்கைக்காக நேரம் ஒதுக்க முடியவில்லையா? – ஹர்பஜன் கேள்வி!

புதுடெல்லி (29 நவ 2020): நாளுக்கு நாள், நாட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரம் டாப்சிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டிவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இட்டுள்ள பதிவில், “விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுக்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் குரலை செவி கொடுத்து கேட்க…

மேலும்...

ஐதராபாத் பெயர் மாற்றம் – யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்றுவதில் என்ன தவறு உள்ளது? என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர்…

மேலும்...

விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – கிருஷ்ணபிரசாத் விளக்கம்!

புதுடெல்லி (28 நவ 2020): விவசாயிகள் போராட்டத்தின் அவசியம் குறித்தும் அது நாடு முழுக்க ஏற்படுத்தவுள்ள தாக்கம் குறித்தும் அகில இந்திய கிசான் சபா நிதி செயலாளர் கிருஷ்ணபிரசாத் விளக்கம் அளித்துள்ளார். வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாஜக சங்க பரிவார் கேந்திரஸ் போராட்டத்திற்கு எதிராக…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தால் திணறும் மத்திய அரசு!

புதுடெல்லி (28 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. அரசு தீர்மானிக்கும் இடத்தில் போராடுவதால் எந்த பயனும் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையிலேயே வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். இதனால் சிங்கூரில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க அதிகமான விவசாயிகள்…

மேலும்...

ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பிளஸ் டூ மாணவி ஆலியா ஃபாத்திமா!

திருவனந்தபுரம் (28 நவ 2020): படகுக் கலையில் பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ச்சி செய்து, அதனை பாட்டில்களில் ஓவியங்களாக வடிவமைத்தற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஆலியா ஃபாத்திமா, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். ஆலியா ஃபாத்திமா, வானியற்பியல், விண்வெளி விண்கலம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், கருந்துளை ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை பாட்டில் ஓவியமாகியதற்காக இந்த விருதை வென்றுள்ளார். விருதுடன், கிராண்ட்மாஸ்டர்…

மேலும்...

மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

லக்னோ (28 நவ 2020): மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு உத்திர பிரதேச ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

மேலும்...