கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

அம்பாலா (09 டிச 2020): கொரோனா தடுப்பூசி சோதனைக்காக தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்…

மேலும்...

தேசபக்தி குறித்த கேள்வி – அதிருப்தி அடைந்த உவைஸி நியூஸ் சேனல்கள் மீது பாய்ச்சல்!

ஐதராபாத் (08 டிச 2020): டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஏஎம்ஐஎம் தலைவர் அசாதுத்தின் உவைஸியின் தேசபக்தி குறித்து, நெறியாளர் கேட்ட கேள்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஜ்தக் செய்திச் சேனல் நடத்திய சமீபத்திய விவாத கிளிப் தவறான விமர்சனங்களுடன் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி மற்றும் எய்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோருக்கு இடையே பரபரப்பான விவாதங்களுக்கு இடையே, செய்தி தொகுப்பாளரும் நடுவருமான அஞ்சனா ஓம் காஷ்யப் தனது தேசபக்தியை நிரூபிக்குமாறு…

மேலும்...

மாலைகளுக்கு பதிலாக சாதியை ஒழிக்கலாம் – மோடி மீது ஜிக்னேஷ் மேவானி விமர்சனம்!

புதுடெல்லி (07 டிச 2020): மாலைகளுக்கு பதிலாக சாதியை ஒழிப்பதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உழைப்பதே அம்பேத்கருக்கு உண்மையான அஞ்சலி என்று தலித் தலைவரும் குஜராத் எம்.எல்.ஏ.விமான ஜிக்னேஷ் மேவானி  பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அம்பேத்கரை நினைவுகூரும் வகையில் அம்பேத்காரின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் நரேந்திர மோடி ட்வீட்டில் அம்பேத்கர் சிலைக்கு குனிந்து குனிந்து நிற்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை விமர்சித்துள்ள…

மேலும்...

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அடைப்புக்கு அதிக அளவில் ஆதரவு!

புதுடெல்லி (08 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இன்று பாரத் பந்த்தும் நடந்து வருகிறது. இருபத்தைந்து அரசியல் கட்சிகள், பத்து தொழிற்சங்கங்கள் மற்றும் 51 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பந்த்க்கு ஆதரவை தெரிவித்துள்ளன. இதற்கிடையே பிரச்னையை தீர்க்க மத்திய அரசு புதன்கிழமை அழைத்த அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விவசாயிகள் அமைப்புகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்…

மேலும்...

பாரத் பந்த்தின்போது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் முடிவு!

புதுடெல்லி (07 டிச 2020): விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது கடைகளை வலுக்கட்டாயமாக மூட அனுமதிக்கப்படாது. சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். என டெல்லி காவல்துறை கூற்றுப்படி, எச்சரிித்துள்ளது. மத்திய அரசின் விவசாயிகளின் சட்டங்களை வாபஸ் பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாரத பந்த் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பந்த்திற்கு காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆதரவை அறிவித்துள்ளன….

மேலும்...

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை!

புதுடெல்லி (06 டிச 2020): உலகளாவிய மருந்து நிறுவனமான ஃபைசர்,கோவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து மற்றும் பஹ்ரைனில் உரிமங்களைப் பெற்ற பின்னர் இந்தியாவில் பயன்படுத்த உடனடி ஒப்புதல் கோரியுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி, சோதனைகளில் 95 சதவிகித சாதகமான முடிவுகளைக் கொண்டிருப்பதாகக் கூ றியுள்ளது. பிரிட்டனும் பஹ்ரைனும் ஏற்கனவே ஃபைசருக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதனை அடுத்து மருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விநியோகிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால் இதுவரை , ஃபைசர்…

மேலும்...

முஸ்லீம் இளைஞரை திருமணம் செய்ய விரும்பிய இந்து பெண் – முஸ்லீம் இளைஞர் கைது!

அலிகார் (06 டிச 2020): சண்டிகரில் இருந்து அலிகாருக்கு வந்த இளம் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் நீதிமன்ற வாசலில் வைத்து முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிகரை சேர்ந்த சோனு மாலிக் (21) என்ற முஸ்லீம் இளைஞரும், இந்து பெண்ணும் அலிகாருக்கு வந்து அங்கு உள்ள நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். இதற்கிடையே அவரை திருமணம்…

மேலும்...

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையின்போது அசத்திய விவசாயிகள்!

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகள் அரசுடன் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சொந்த உணவை கொண்டு வந்ததோடு அரசு ஏற்பாடு செய்த உணவையும் நிராகரித்தனர். மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சனிக்கிழமையன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது சொந்த தேநீர் மற்றும் உணவைக் கொண்டு வந்தனர். ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை பிற்பகல் 2.30 மணிக்கு…

மேலும்...

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் கிடுக்கிப்பிடி – தோல்வியில் முடிந்த ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்தது.. விதிகளை ரத்து செய்யாமல் எந்த விவாதமும் இருக்காது என்று விவசாயிகள் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். விதிகளை வாபஸ் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக விவசாயிகள் தெளிவுபடுத்தியிருந்தனர். அதே நேரத்தில், சட்டங்களை ரத்து செய்வது…

மேலும்...

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரிட்டிஷ் எம்பிக்கள் ஆதரவு!

லண்டன் (05 டிச 2020): கனடா பிரதமரை தொடர்ந்து 36 பிரிட்டிஷ் எம்பிக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து எம்.பி.க்கள் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராபின்ஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் முன்னாள் தொழிலாளர் தலைவர் ஜெர்மி கோர்பினும் கையெழுத்திட்டுள்ளார். . 36 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் மூதாதையர்கள் பஞ்சாபை சார்ந்தவர்கள். தொழிலாளர் எம்.பி. தன்மாஜீத் சிங் தேசி தலைமையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில், டொமினிக் ரப்…

மேலும்...