கூகுள் சி.இ ஓ சுந்தர் பிச்சை அமெரிக்க அரசின் மீது அதிருப்தி!

நியூயார்க் (23 ஜூன் 2020): வெளிநாடுகளிலிருந்து அமெரிக்‍கா வந்து பணிபுரிய அனுமதி வழங்கும் அனைத்து வகையான விசாக்‍களும் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த உத்தரவு நாளைமுதல் அமலுக்‍கு வருகிறது. கொரோனா நெருக்‍கடியால், அமெரிக்‍காவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளை சரிசெய்து, உள்நாட்டினருக்‍கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்‍கும் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ட்ரம்பின் உத்தரவுக்‍கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களால்தான் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், எனவே, அவர்களுக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்: