கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு!

Share this News:

மாஸ்கோ (15 அக் 2020): கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இந்த ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை பரிசோதனை செய்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய அதிபர் அதிரடியாக தெரிவித்துள்ளார். எபிவேக்கொரோனா என என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சைபீரியாவில் உள்ள வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்டபரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 3-ம் கட்ட பரிசோதனை முழுமையடைவதற்கு முன்னதாகவே எபிவேக்கொரோனா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply